கஜாவை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்…ஹெலிகாப்டர்கள் தாங்கிய 3 கப்பல்கள் அனுப்பி வைப்பு..பாதுகாப்பு அமைச்சகம்..!!
கஜா புயலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு 3 கப்பல்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து தெரிவித்த பாதுகாப்பு துறை விசாகப்பட்டினத்தில் இருந்து, ஹெலிகாப்டர்கள் தாங்கிய கப்பலில்,தமிழகம் நோக்கி உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஹெலிகாப்டர்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் உணவு பொருட்களுடன் தென் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .
மேலும் சென்னையில் இருந்து மேலும் 3 கப்பல்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது அது தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் கஜா புயலை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தது.
மேலும் அரபிக்கடல் பகுதியில் 17ம் தேதிக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலை இருப்பதால் அதற்கும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
DINASUVADU