கஜாவின் காட்டம்…..!!டெல்லி புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி…!!!
கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். கடந்த 16-ம் தேதி ஒட்டு மொத்த தமிகத்தையும் உலுக்கி எடுத்த கஜா பலமான புயலாக தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் 5 நாட்கள் ஆகியும் மீள முடியாமல் தவிக்கின்றனர். அம்மாவட்டங்களின் ஏராளமான பொருள் சேதத்துடன் உயிர் தேசத்தையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை காவு வாங்கிய கஜா புயலுக்குப் பின்னர் தான் சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின. பின்னர் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் ரூ.1000 கோடி நிவாரண நிதியாக முதற்கட்டமாக அறிவிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.இதன் பின்னர் கஜா புயல் சேத மதிப்பீட்டு அறிக்கையுடன் நிவாரண நிதியாக ரூ.13 ஆயிரம் கோடியை பிரதமரிடம் வழங்க கோர முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் முதல்வர் நாளை காலை 9.45 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்துக்குத் தேவையான புயல் நிவாரண நிதியைக் கேட்க உள்ளார். அதன் பின் மத்தியக் குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU