கஜாபுயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது…!கமல் வேதனை..!!
கஜா புயலால் நாகை,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மீண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த மக்களை சந்தித்தார்.அவர்களின் குறைகளையும் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது – மேலும் கஜா புயலில் வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது என்று ஆய்வுக்கு பின் இவ்வாறு ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.