ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி.?
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
மதுரையில் உள்ள திருமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் அவர்களின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.
விழா முடிந்து காரில் பெரியகுளம் சென்றுகொண்டிருந்த போது, வழியில் ஓட்டல் ஒன்றில் காரை நிறுத்தி இரவுணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில பரிசோதனைகள் முடிந்து, சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.