இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.
திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, பாண்டியராஜன், ஆறுக்குட்டி உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நிறைவடைந்தது. எழுத்துப்பூர்வமான வாதங்கள் மார்ச் 7 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…