இன்று 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் அந்த வழக்கு கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.
2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அன்று அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு அடுத்த 2 நாட்களில் அதாவது பிப்ரவரி 7ம் தேதியன்று தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா குடும்பத்தார் மீது புகார் தெரிவித்தார் ஒ.பன்னீர்செல்வம்.
இதனை அடுத்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. சசிகலா அணி மற்றும் பன்னீர் செல்வம் அணியாக பிரிந்தது.
பிப்ரவரி 14ம் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வழங்கப்பட்ட மறு நாளே டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
சசிகலா சிறைதண்டனை பெற்றதை அடுத்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்டார்.
2017ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் அளித்த புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 2017 ஆகஸ்ட் 21ம் தேதியன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன.
ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்.
செப்டம்பர் 7ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்கக்கோரி, ஆளுநரை சந்தித்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.
செப்டம்பர் 18ம் தேதியன்று ஆட்சியை கலைக்கக்கோரிய 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
செப்டம்பர் 20 18-எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
செப்டம்பர் 24ம் தேதியன்று சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது.
இந்தாண்டு ஜனவரி 23ம் தேதி நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தது.
இன்று ஜுலை 14ம் தேதி 18 எம்எல்ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…