ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம்

Published by
லீனா
  • சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.
  • இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் ஆணையிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி திரும்ப பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். மேலும் இவர் அதிமுக வேட்பாளர் ஆர்.சுந்தரராஜின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தேர்தல் வழக்கை காரணம் காட்டி ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே கிருஷ்ணசாமி வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதி ரவிச்சந்திரபாபு, இந்த மனுவை இன்று விசாரித்தார். இதனையடுத்து, ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் ஆணையிட்டார்.

Published by
லீனா

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

6 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

7 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

8 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

8 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

9 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

9 hours ago