ஓடும் ரயிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.டி.ஆர்..!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 வயது மகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
ரயில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அருகே வந்தபோது அதே ரயிலில் பணியில் இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்த டி.டி.ஆர் அனிஷ் குமார் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து அனிஷ் குமாரைப் பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.