ஓசூரைச் சேர்ந்த நபர் கர்நாடக மாநிலத்தில் அடித்துக் கொலை..!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நபர் கர்நாடக மாநில எல்லையில் உள்ள மதுபான விடுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த செந்தில் திங்கட் கிழமை இரவு கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மதுக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கியதில் செந்தில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

ஓசூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செந்தில் ஓசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கோபியின் கூட்டாளி என கூறப்படுகிறது. செந்தில் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்