#ஓசிபிரியாணிதிமுக …!இந்திய அளவில் ட்ரென்ட் ஆகும் ஓசி பிரயாணி ஹஷ்டக்…!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கட்சியில் இருந்து நீக்க முடிவு
விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ் ஆவார்.இவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு பிரியாணி வாங்கச் சென்றுள்ளனர்.அங்கு பிரியாணி வாங்கச் சென்றனர்.பிரியாணி முடிந்தது என்று கடையில் உள்ளவர்கள் கூறியதால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .இதன் பெயரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஓன்று வெளியிடப்பட்டது.அந்த வீடியோவை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஓசிபிரியாணிதிமுக என்ற ஹஷ்டாக் இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.