ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ..! பணி நியமன ஆணையை வழங்கினார்..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!
ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக ஓக்கி புயலால் உயிரிழந்த குடும்பங்களில்10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவ. 29-ஆம் தேதி ஒக்கி புயலால் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக, கன்னியகுமாரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத வகையில் விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஒக்கி புயலினால் மரணமடைந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.6 கோடி, காயமடைந்த 20 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம், கரை திரும்பாத 234 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11.70 லட்சம், குறைந்த கால மீன்பிடி நிவாரணத் திட்டத்தின் கீழ் 28,643 மீனவ குடும்பங்களுக்கு, தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14.32 கோடி நிவாரணத் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
DINASUVADU