ஓகி புயல் நிவாரண பணிகள் : மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு

Default Image

 

ஓகி புயலினால் தென்தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்கையே கேள்விக்குறியாகும் நிலை உருவானது.

மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாய் போயின. அதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதன் பொருட்டு

புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மூழ்கிய பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த சிறப்பு அதிகாரிகளின் அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆலோசனையை தொடர்ந்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிவாரணம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்