ஓகி புயலில் சிக்கி இறந்து போன மற்றொரு மீனவரின் உடல் ஒரு மாத காலத்திற்கு பின்பு கண்டுபிடிப்பு…
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார்.
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று இரவு 7.00 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இருந்து தோழர் அர்சுணனுக்கு வந்த தகவலில் மற்றொரு மீனவர் கினீஸ்டன் உடல் கோழிக்கோடு கடலில் மீட்கப்பட்டு டிஎன்ஏ டெஸ்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினீஸ்டன் உடலை எடுத்து வர அவரது உறவுகளை அழைத்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுணன், மாநகர செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று அதிகாலை கோழிக்கோடு சென்றுள்ளனர். நாளை காலை கீனிஸ்டன் உடல் தூத்துக்குடி வர உள்ளது. மற்ற 3 பேரான பாரத், ரவீந்திரன், ஜோசப் ஆகியோரது உடலை மீட்கும் பணி தொடர்கிறது.
துயர் துடைக்கும் பணியை தொடரும் கம்யூனிஸ்டுகள்….