ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் !கமல்ஹாசன்
மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன்,தென்னிந்திய அளவிலான அரசியலை முன்னெடுத்து, வட மாநிலங்களுக்கு இணையாக குரலை எழுப்பினால் உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம்; அடுத்த சுற்று’ என்ற கருத்தரங்கத்தில் பேசிய அவர் இதனை கூறினார்.
சோழர்காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கம்போடியாவை சிறப்பாக ஆட்சி நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற அவர், தற்போது ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என்றார். திராவிடம் என்பது புவியியல் ரீதியான பெயர் தான் என்றும், தென்னிந்திய அளவிலான அரசியலை முன்னெடுப்பதன் மூலம், வட மாநிலங்களுக்கு சமமான குரலை எழுப்பி உரிமைகளை கேட்டுப்பெற முடியும் என்றும் கமல் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.