இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை மெட்ரோ ரயிலிலும் மாநகரப் பேருந்துகளிலும் பயணம் செய்ய ஒரே ஸ்மார்ட் அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் முன்கூட்டியே பணம் செலுத்தி ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக்கொள்கின்றனர். இதில் ஏற்கெனவே செலுத்திய தொகை முடிந்ததும் மீண்டும் பணம் செலுத்தி அட்டையில் ஏற்றிக்கொள்ளலாம்.
இதேபோல் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வோர் தூர வரையறையின்றி ஒரு மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்ய ஆயிரம் ரூபாய் சீட்டு எடுக்கின்றனர். குறிப்பிட்ட இடங்களுக்கு இடையில் பயணம் செய்வதற்கும் மாதாந்திரச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து இரண்டிலும் பயணம் செய்வோர் இப்போது தனித்தனியாக அட்டைகளை வாங்க அதிகத் தொகை செலவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் ஒரே ஸ்மார்ட் அட்டையை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.