ஒரே நாளில் 600 கிலோ குட்கா சென்னையில் பொருள்கள் பறிமுதல்!
ஒரே நாளில் 600 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பொருள்களை சென்னையில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். மேட்டுக்குப்பத்தில் நேற்று மாலை வாகனச் சோதனை நடத்திய துரைப்பாக்கம் போலீசார், சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த கண்ணகி நகர் சரவணன், நித்தியானந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
குட்கா பொருள்களை பாரிமுனையிலிருந்து மொத்தமாக வாங்கி, கண்ணகி நகர், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம் பகுதிகளில் விற்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பொருட்கள், ஒரு இருச்சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.