ஒரேநாளில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்…!போலீசார் கட்டுப்பாட்டில் சென்னை …!
நாளை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் விநாயகர் சதூர்த்திக்காக பொது இடங்களை ஆக்கிரமித்து சிலைகள் வைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெறாமலும் பல இடங்களில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு வகுத்த விதிகள் படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது சட்ட விரோதம் ஆகாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்துள்ளது.அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் 3 காவல் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.