ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் கிடைத்தது நடிகர் மன்சூர் அலிகானுக்கு!
நிபந்தனை ஜாமீன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி, பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.