புதிய செயலி,பேஸ் டேகர் (Facetagr), கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது குற்றங்கள் சம்பந்தப்பட்ட மக்களை பிடிக்க உதவும் செயலி ஆகும். சென்னை போலீஸ் துறையிலுள்ள தியாகராயநகர் காவல்துறை நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை, குற்றவாளிககளை பிடிக்க பெரும் உதவியாக இருந்ததால் நகர முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குற்ற காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்ட ஏறத்தாழ 45 ஆயிரம் பழைய குற்றவாளிகளின் படத்தை பதிவேற்றப்பட்டது.ரோந்து போலீஸ் சோதனையில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் படத்தை எடுத்தால், அடுத்த 10 விநாடிகளில் வழக்கு தொடர்பாக தகவல்களைப் பெறுவார். குற்றவாளிகளை சிக்க வைப்பதால் இந்த செயலியை , மற்ற மாவட்டங்களில் போலீசார் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இருப்பினும், வெளிமாநில குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகள் காரணமாக, மற்ற மாநிலங்களில் இருந்த குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திர மற்றும் தெலுங்கானாவிலிருந்து பழைய குற்றவாளிகளின் விவரங்கள் அந்தந்த மாநில போலீஸ் உதவியுடன் பேஸ் டேகரில் (Facetagr) பதிவேற்றப்பட்டன.
ஒரு லட்சம் குற்றவாளிகள் விவரங்களை இதுவரை சேகரித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தில் குற்றவாளிகள் விவரங்கள் இன்னும் சில நாட்களில் பதிவேற்றப்படும். இதேபோல், வடமாநிலங்களில் பல்வேறு முக்கிய வழக்குகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் , மேலும் நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முயற்சி குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் தமிழக காவல் துறை இறங்கியுள்ளது
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…