ஒருவாரத்துக்குள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்!
இன்னும் ஒருவாரத்துக்குள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவப் படிப்புகளின் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. ஒருவாரத்துக்குள் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னை அரசு பல்மருத்துவக் கல்லூரி, 18தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1450பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
மாநில ஒதுக்கீடாக 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2445 எம்பிபிஎஸ் இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 127எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் 783எம்பிபிஎஸ் இடங்களும் என மொத்தம் 3355இடங்கள் உள்ளன. பல்மருத்துவப் படிப்புக்கு மாநில ஒதுக்கீடாகச் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 85இடங்களும், 18 தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் 1020இடங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 68 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1173இடங்கள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் சேரத் தேசிய அளவில் தரவரிசையில் இடம்பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 12முதல் 24வரை நடைபெற உள்ளது. மாநில இடங்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு ஜூன் 25 முதல் ஜூலை 5 வரையிலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜுலை 15 முதல் 26வரையிலும் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2018-2019கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாண்டு வகுப்புகள் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.