ஒக்கி புயலில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் கினிஸ்டன் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்ப முடியாமலும், கடலில் காணமல் போனவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமலும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒகி புயலில் சிக்கியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களில் 6 மீனவர்கள் காணவில்லை. இதில் மீனவர் ஜூடுவின் உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்ததாக ஒகி புயலில் சிக்கிய தூத்துக்குடியை சேர்ந்த ஜெகன் என்பவர் 2 நாட்கள் கடலில் தவித்தவர் கேரளா அரசின் முயற்சியால் மீட்கபட்டு, பிறகு மருத்துவமனை சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக உள்ளார்.
அடுத்ததாக ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் கினீஷ்டன் உடல் கண்டெடுக்கப்பட்டு. அவரது உடல் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, பிறகு பிறகு அவர்களின் உதவியுடன் டிஎன்ஏ டெஸ்ட் செய்து உறுதி செய்யப்பட்டது.
கினீஸ்டன் உடலை எடுத்து வர அவரது உறவுகளை அழைத்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுணன், மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் நேற்று அதிகாலை கோழிக்கோடு சென்றுள்ளனர்.இன்று காலை கீனிஸ்டன் உடல் தூத்துக்குடி வந்தது .முத்து DYFI மாவட்டசெயலாளர் ,ஆறுமுகம் Cpm மாநகரக்குழ உறுப்பினர், ஜாய்ச்சன் Sfi மாநகரதலைவர் ,காஸ்ட்ரோ DYFI மாநரக்குழு, கென்னடி citu தலைவர் ஆகியோர் இறுதிசடங்கில் பங்கேற்றனர்.