ஒகி புயல் காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை…!
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக தற்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,மேலும் அங்கு ஒகி புயல் காற்று காரணமாக சுமார் 60 தென்னை மரங்கள் கிழே விழுந்துவிட்டது எனவும் தகவல் தெரிவிக்கின்றன
இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.