ஐ.நா.வின் அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள் !சுப்பிரமணியன் சுவாமி

Published by
Venu
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ,காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள் என  கூறியுள்ளார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம்  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 49 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும், காஷ்மீரில் பெலட் துப்பாக்கிகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரும், பாஜக எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை நான் குப்பைத்தொட்டியில் தான் வீசி எறிந்திருப்பேன். இந்த அறிக்கையை தயாரித்தவர்களை நரகத்தில் தள்ள வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். காஷ்மீர் விவகாரம் பற்றி தெரியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதால், அவர்கள் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சண்டே ஸ்பெஷல்..! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க ..!

சண்டே ஸ்பெஷல்..! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க ..!

சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன்…

6 minutes ago

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…

28 minutes ago

பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!

சிட்னி :  ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…

46 minutes ago

விண்வெளியில் முளைகட்டிய பயிர்… இஸ்ரோ புதிய சாதனை!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…

1 hour ago

தீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம்..! ஜனவரி 2025 இல் எப்போது?

கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…

1 hour ago

தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் இந்த தேதியில் கனமழை வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்!

சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…

1 hour ago