ஏ.ஆர். ரஹ்மானை பற்றி வீடியோ வெளியிட்ட இசையமைப்பாளர்..! பரபரபில் திரையுலகம்..!
ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் [1]என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் தனது பக்கத்தில் இந்திய பொருளாதாரம் விவசாயிகளின் பொருளாதாரம்.இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான்.கிராமங்களை அழித்துவிட்டு நகரமயமாக மாற்றுவது வளர்ச்சி அல்ல என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இவர் தற்போது தனது பக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் 3 வயது குழந்தையாக இருக்கும் போது தான் வாசித்த இசையும் , பாடலும் வெளியிட்டுள்ளார்.இது இணையத்தில் பரவி வருகிறது.
Sang this song for ARR sir when I was 3.5 years old … nostalgic video @arrahman pic.twitter.com/sJMFZTGb9I
— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2018