ஏழை மாணவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ரூ. 137.18 மதிப்பில் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சோதனைச் சாவடியாக அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விட்டன. முதல்-அமைச்சரால் மிக விரைவில் இது திறக்கப்பட உள்ளது.பள்ளிகள் திறந்திட இன்னும் 15 நாட்கள் உள்ளது. அதற்குள் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அந்த வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து துறையிலே கொண்டு வர இருக்கிறோம். மாணவர்கள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக நவீன படிகட்டுகள் கொண்ட பேருந்துகளாக அவை அமைக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 70 புதிய பேருந்து பணிமனைகளை திறக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதிகளின் படி அறிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது சுமார் 54 பணிமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. சில பணிமனைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
சில பணிமனைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. இவையெல்லாம் முடிவு பெற்று கூடிய விரைவில் அறிவிக்கப்பட்ட அத்தனை பணிமனைகளும் திறக்கப்படும்.
மாணவ-மாணவிகளுக்கு விரைவில் இலவச பயண அட் டையை வழங்கிட ஏற்பாடு செய்து வருகிறோம். பள்ளிகள் திறக்கப்படக் கூடிய சூழலில், மாணவர்களின் பயணத்திற்கு அரசு போக்குவரத்தில் எந்தவித இடையூறும் இருக்காது. மாணவர்கள் சீருடையில் இருந்தால் போதும். அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டு உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அப்போது அவருடன் ஊரக தொழில்துறை அமைச் சர் பெஞ்ஜமின், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, இணைஆணை யர் பிரசன்னா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, பொன்னேரி எம். எல்.ஏ. சிறுனியம் பலராமன், கும் மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ். விஜயகுமார் ஆகியோர் உடன் வந்தனர்.