ஏழு பேர் விடுதலை இல்லை..!புயலை கிளப்பிய சு.சாமி கருத்து..!!!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்இந்த நிலையில் இன்று கூடிய அமைச்சரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
இன்று கூடிய அமைச்சரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என்றும், விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர்கள் கூறினார்கள்,இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி,தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார்,இது தமிழக மக்களிடையே புயலை கிளப்பியுள்ளது.
DINASUVADU