இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால் தற்போது 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.புதிதாக ஏழு நீதிபதிகளை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி வழக்கறிஞர்களாக பணிபுரிந்துவரும் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியபிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோரை புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இவர்கள் ஏழு பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…