ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ரூ.600 கோடி வரை வங்கிகளில் மோசடி !சிபிஐ வழக்குப்பதிவு
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ரூ.600 கோடி வரை வங்கிகளில் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிவசங்கரன் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கு முன் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது.
இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். இந்நிலையில், தமிழகத்தில் 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்த வோடபோன் நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.