ஏப்ரல் 5ம் தேதி மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுடன், மேலும் 3 மாதம் கால அவகாசங்கள் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு தமிழகத்தில் விவசாயிகள், எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்னை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக சார்பில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்த உள்ளதாகவும், தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்