ஏப்ரல் 24-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி!
பள்ளிக்கல்வித்துறை,தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி துவங்கி மே 7-ஆம் தேதி நிறைவடையும். மே 23 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.