எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்!மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்
எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது என்றும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை வரவிடமால் தீவிரவாத கூட்டம் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவுடன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டில் ஒரு முறை கூட திமுக, கர்நாடக மாநிலத்திடம் கோரிக்கை வைத்தது இல்லை.அரசுக்கு எதிராக பேசுவதில் தவறில்லை , ஆனால் புரட்சி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். தமிழனை உயர்த்துவதாக கூறியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எஸ்.வி சேகர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி சேகருக்கு உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.