எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக இழிவான பதிவைப் பகிர்ந்திருந்தார்.
இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…