எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியது, ‘பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி.சேகரை கட்சி பணியில் இருந்தும், சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கிவைத்துள்ளோம். எஸ்.வி.சேகர் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்’ என்றார்.
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்ததாக எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.