எஸ்.வி.சேகர் ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜராக கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!
அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் எஸ்.வி.சேகர் ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜராக கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் எஸ்.வி.சேகர் ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜராக கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.