நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக பேசிய நிலையில் அவரை கைது செய்யாததை கண்டித்து, சென்னை காவல் ஆணையருக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், கடந்த சில வாரங்களுக்கு முன், சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டார். அவரின் கருத்துக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, அவரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்வி சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.ராமதிலகம் தள்ளுபடி செய்து, சாதாரண பொதுமக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதே நடவடிக்கையை எஸ்.வி.சேகர் மீதும் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அவர் மீது பல இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் போலீசார் அவரை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய நண்பர் ஆந்தை குமார் சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சந்தித்தார் எஸ்.வி.சேகர்.ஒருபுறம் போலீஸ் தேடிகொண்டிருக்க மறுபுறம் அவர் தனது நண்பரை சந்தித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…