எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றி முதல்வர், டிஜிபியிடம்தான் கேட்க வேண்டும்!பொன் ராதாகிருஷ்ணன்
விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குமரியில் துறைமுகப் பணிகள் தொடங்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.காவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்த வேண்டும்.தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டுவர முடியும்.ஆனால் அதிகாரிகள், காவல்துறையினர் அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு பாஜக தடையாக இல்லை.எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றி முதல்வர், டிஜிபியிடம்தான் கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.