எவ்ளோ நாளைக்கு தான் பொறுத்திருக்கிறது…! பொறுத்தது போதும்…. பொங்கி எழு….! சமகால அரசியலை கலாய்க்கும் இரத்தக்கண்ணீர் குழுவினரின் மேடை நாடகம் :

Default Image

வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை மைய கதாபாத்திரமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள இந்த மேடை நாடகம் சமகாலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளை மிகவும் வெளிளப்படையாக நையாண்டி செய்கிறது.

ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்கள், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா, கிரிக்கெட் சூதாட்டம், நடிகர்களின் அரசியல் பிரவேசம்…. என நாடகத்தில் பல்வேறு சமகால நடப்புகள் இடம் பெற்றிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்ற நாடகம், பார்வையாளர்களின் கைதட்டல் மழையில் நனைந்து கொண்டே இருந்தது.

குறிப்பாக சமூக ஊடகங்களில் அதிகம் நடமாடும் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்நாடகத்துக்கு அதன் வழியாகவே பார்வையாளர்கள் வந்துள்ளனர். அரசியல் வேட்க்கை கொண்ட ஒரு நவீன தமிழ் இளைஞனின் பேஸ்புக் டைம்லைனில் என்னவெல்லாம் வருமோ அவற்றுக்கு நாடக வடிவம் கொடுத்துள்ளனர் இரத்தக்கண்ணீர் குழுவினர்.

மேடை நாடகங்கள் வழக்கொழிந்துவிட்டன என்ற கருது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மேடை நாடகத்துக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டணம் செலுத்தி திரண்டு வந்திருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யபட வைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்