எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது!ரஜினிகாந்த்

Default Image

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

நலம் விசாரித்த பின்  செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு.

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும்  “எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது”.காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்” என்றும்  நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக  நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி என்றும் அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.

முன்னதாக  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்