எலி காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழகத்தில் நடவடிக்கை..!! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகள் மூலம் எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் மருத்துவக் குழு அமைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
உடுமலைபேட்டை தொகுதிக்கு உட்பட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து பொள்ளாச்சி அடுத்த அம்பாரபாளையம் நீர்ரேற்று நிலையத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில் எல்லையோர கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
DINASUVADU