எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.1500 கோடி ரூபாய் செலவில் 198 புள்ளி 27 ஏக்கரில் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்கான விழா ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை புது நத்தம் பறக்கும் பாலம் திட்ட அடிக்கல் நாட்டு விழா, அரசு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை திறப்பு ஆகியவற்றிலும் பிரதமர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…