எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ 55,000 ஆகும். அதனை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும். இதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.டி. தினகரனும் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வரும் இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வு அவசியமா ..? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…