என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் …!பதவியை ராஜினாமா செய்யத்தயார்…!அரசியலை விட்டும் விலகத் தயார்…!அதிரடி தகவலை வெளியிட்ட அமைச்சர்
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடட அறிக்கையில், அரசு ஒப்பந்தங்களை தன் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சி துறையாக” மாற்றியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அராஜகங்களை வெளியிட்ட தனியார் பத்திரிகையாளர்களை மிரட்டிய அமைச்சரின் கான்ட்ராக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசின் கஜானாவை, தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்கள் மூலம், அப்படியே “ஹைஜாக்” செய்து கொள்ளையடித்து வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் தி.மு.கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரின் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வேலுமணி பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது.அதிமுக அரசை கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.