என் தம்பி தளபதி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்!தம்பியை அழைத்த உலக மகா அண்ணன்!
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.ட்விட்டர் மூலம் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதில் இன்று ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் நறுக்கென்று பதில் கூறியுள்ளார்.
எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன். https://t.co/cX35kT5GDH
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
ரசிகரின் கேள்வி: உங்கள் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கமல்ஹாசன் எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று நறுக்கென்று பதில் கூறியுள்ளார்.