வேலூரில், 11-ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்குக் காரணமாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.வேலூரை அடுத்த பொய்கையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த, அதே பகுதியைச் சேர்ந்த அருண் பிரஷாத் என்கிற மாணவன், கடந்த 3-ம் தேதி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளான்.
இதற்குக் காரணம் கணித ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று அந்தக் கடிதத்துடன் பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி வளாகத்தில் இருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை உயிரிழந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில், ஆசிரியர் காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், அறிவியல் ஆசிரியர் இருந்த அறையையும் கற்களால் தாக்கினர். இதைத் தொடர்ந்து, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளித் தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார். மாணவன் அருண் பிரஷாந்த் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,
DINASUVADU
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…