என்.எல்.சி மனித வள அதிகாரி கொன்று புதைப்பு!

Default Image

இரண்டு மாதங்கள் கழித்து நெய்வேலியில் என்.எல்.சி மனித வள அதிகாரியை கொலை செய்து புதைத்த சம்பவம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண் தெரிந்ததால் நண்பர்களால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் என்.எல்.சி.யில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 55 வயதான அசோக் குமார் திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் நண்பர்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அசோக்குமாரின் அண்ணன் சப்ஷன் என்பவர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாயமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் மாயமான அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 19 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

எந்த ஊரில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து வங்கியில் விசாரித்தனர். பணம் முழுவதும் நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் களில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது தெரியவந்ததால். சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்களில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது இரு நபர்கள் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் இருவரும் அசோக்குமாரின் நண்பர்களான நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் வடலூர் ராஜேஷ் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். முதலில் தங்களிடம் ஏ.டி.எம் கார்டை தந்துவிட்டு மாயமானதாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்த இருவரும் போலீஸ் கொடுத்த சிறப்பான கவனிப்பால் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

இதில் என்.எல்.சி அதிகாரி அசோக்குமாரை கடத்தி கொலை செய்ததையும், அவரது உடலை குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தான்குப்பத்தில் உள்ள இளங்கோ என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மீன்குட்டையில் புதைத்ததாக தெரிவித்தனர்

மேலும் சம்பவத்துக்கு சில தினக்களுக்கு முன்பு கூட்டாக மது அருந்தி உல்லாசமாக பொழுதை கழித்த போது என்.எல்.சி அதிகாரி அசோக்குமார் , நண்பர் சுரேஷிடம் ,அவரது ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதற்கு, வசதியாக ரகசிய எண்ணையும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட தொகையை எடுத்து விட்டு வங்கி இருப்பை சரி பார்த்த போது, அதில் 20 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.

 

இதையடுத்து அந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சம்பவத்தன்று அசோக்குமாருக்கு மது வாங்கிகொடுத்து காரில் கடத்திச்சென்று அவரிடம் உள்ள ஏ.டி.எம் கார்டை அபகரித்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து அங்கு புதைத்து விட்டு தலைமறைவாகி உள்ளனர். அதன் பின்னர் அவரது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி சுரேஷும்,ராஜேசும் 19 லட்சம் ரூபாய் வரை பணத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே என்.எல்.சி அதிகாரி அசோக்குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை இருவரும் அடையாளம் காட்டினர். வருவாய் அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அசோக்குமாரின் உடல் தோண்டி எடுத்து பிணகூறாய்வு செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session