என்பிஆர் கணக்கெடுப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி தலைமை செய்யலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமீமுன் அன்சார்…

Default Image

தமிழக சட்ட  பேரவையில் என்பிஆர் கணக்கெடுப்பில் உள்ள புதிய நடைமுறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மனித நேய ஜனநாயக கட்சியின்  பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியும்  வெளிநடப்பு செய்தார். இதை தொடர்ந்து வெளிநடப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசும் போது, 50க்கும் மேற்பட்ட இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. தமிழக அரசு கோரிக்கை நிராகரித்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போகிறேன் எனக்கூறிக் கொண்டு தமிழக   தலைமை செயலக நான்காவது நுழைவு வாயிலின் அருகே தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் தலைமை செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்