” என்னுடைய நாய்யுக்கு தவறான சிகிச்சை ” நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார்..!!

Default Image

என்னுடைய நாயை காணவில்லை மீட்டுக் கொடுங்கள் என காவல்நிலையத்திற்கு புகார் வருவதுண்டு.ஆனால் தற்போது வந்த புகார் அனைவரையும் வியப்படைய வைத்தது…

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் மோசஸ்- லிடியா பத்மினி தம்பதிகள். 8 ஆண்டுகளாக  நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். அதை ஆசையாய் பாப்பு என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.மோசஸீன் மனைவி பத்மினிக்கும் பாப்பு செல்லப்பிள்ளை.அதனுடைய குட்டிகள் ஒன்றையும் புஜ்ஜி என்று பெயர் வைத்து ஆசை ஆசையாக செல்லமாக வளர்த்து வந்தனர்..

 

தனக்குடைய குழந்தைகளை போல பாப்புவும், புஜ்ஜியும் மீது உயிராய் இருந்து வளர்த்து வந்தனர் அத்தம்பதிகள். வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் பாப்புவும், புஜ்ஜியும் தான் தனக்கு துணையாக இருப்பார்கள் என்றும் லிடியா பத்மினி கூறினார் . பாப்புவும், புஜ்ஜியும் மோசஸ் தம்பதி மட்டுமல்ல அக்கம்பக்கத்தினருக்கும் ஒரு அதிக பாசம்.

இந்த நிலையில் பாப்புவுக்கும் புஜ்ஜிக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக ஒன்றன்பின் ஒன்றாக இரண்டையும் சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அடுத்தடுத்து பாப்புவும், புஜ்ஜியும் இறந்துவிட்டன.

இதுகுறித்து மோசஸ் கூறும்போது,

புஜ்ஜி இறந்த சிறிது நேரத்திலேயே பாப்புவும் இறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.எங்களுக்கு டாக்டர் அளித்த சிகிச்சை மீது எங்களுக்கு சந்தேகம் வறுகின்றது என்றார் மோசஸ். இதனையடுத்து எங்கள் செல்ல பிராணிகளான பாப்புவும், புஜ்ஜியும் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது.சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனை தவறான சிகிச்சை அளிக்க போய் தான்  பாப்புவும், புஜ்ஜியும் இறந்தது என்று கூறிய மோசஸ் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி   குமரன் நகர் காவல்நிலையத்தில் மோசஸ் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் ஒருவர் இறந்தால் என்ன செய்வார்களோ அதே போல் பாப்புவின் உடலை வீட்டில் கிடத்தி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். இனி தனக்கு யார் இருக்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கும் மோசஸின் மனைவியை பார்க்கும்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சற்று கண் கலங்கினர்.

நாய்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையை தொடர்புகொண்டபோது அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை. பாப்பு மற்றும் புஜ்ஜியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகேமுழுமையான தகவல் கூறமுடியும் என்றனர்.ஆனால் சென்னையில் தவறான சிகிச்சையால் தனது இரண்டு நாய்கள் உயிரிழந்து விட்டதாக காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று சென்றிருக்கிறது….

இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்