என்னுடைய ஆதரவு அரசியலில் ரஜினி-கமலுக்கு இல்லை ..!டி.டி.வி.தினகரனுக்குதான் …!அட்டகத்தி தினேஷ் அதிரடி முடிவு
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ்.
இவர் நடித்து சில படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளது.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் அண்ணனுக்கு ஜே ஆகும் .
சமீபத்தில் நடந்த இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தினேஷ் பேசுகையில்,எனக்கும் சின்ன வயது முதல் அரசியல் ஆசை உள்ளது.அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.அனால் கண்டிப்பாக அதற்கு அனுபவம் வேண்டும்.
ஒரு சில நியமான கோரிக்கைகளுக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகின்றனர்.இதனால்தான் எனக்கு அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.சரியான தலைவர் தமிழகத்தில் இல்லை.ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.எப்பவுமே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை நான் ஆதரிக்க மாட்டேன்.ஆனால் கண்டிப்பாக அமமுக துனைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரனை ஆதரிப்பேன்.மிகவும் சிறப்பாக அவர் பேசுகிறார்.சரியாக எல்லாவற்றையும் அணுகுகின்றார்.
மேலும் அவருடன் நான் ஒருமுறை லயோலா கல்லூரியில் பேசினேன்.இப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம் என்று தினேஷ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.