சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை ஈரோட்டில் ரூ. 50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின் குடும்பத்தினருடன் சந்தித்தார்.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் சிறுவன் முகமது யாசினின் செயலை பாராட்டி தங்கச் செயினை பரிசளித்தார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில்,என் பிள்ளையாக நினைத்து சிறுவன் முகமது யாசின் என்ன படிக்க நினைத்தாலும் படிக்க வைப்பேன்.காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது.சிறப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டுவருகிறார். சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும்.
இந்தியா 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும்.மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் நிச்சயம் தேவை.
இன்னும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படவில்லை, நேரம் இருக்கிறது.ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்துவது நல்லது.தமிழருவி மணியன் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சியே என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…