என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்க திட்டம் – கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்..!!
நெய்வேலி என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனத்தை சுற்றியுள்ள 26 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அச்சமடைந்த விவசாயிகள், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்த விவசாயிகள், அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூன்றாவது சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.